நடிகர் கார்த்தி நடிப்பில் கடைசியாக ஜப்பான் திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றன. அதே சமயம் நடிகர் கார்த்தி,வா வாத்தியார், மெய்யழகன் போன்ற படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வந்தார். அதன்படி மெய்யழகன் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதற்கான முழு ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அடுத்ததாக இவர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படத்தில் நடிகர் கார்த்தி வில்லனாக நடிக்கிறார் என்று ஏற்கனவே சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் கார்த்தி அடுத்ததாக புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக கார்த்தி 29 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை பிரபல இயக்குனரும் நடிகருமான தமிழ் இயக்க இருக்கிறார். இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. தற்போது இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். அந்த போஸ்டரை பார்க்கும்போது இப்படம் சர்வைவல் படம் போல் இருக்கும் என தெரிகிறது. மேலும் அந்த போஸ்டரில் இப்படமானது 2025 ஆம் ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.