கார்த்தி 29 திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறது என புதிய தகவல் வெளிவந்துள்ளது.கார்த்தி நடிப்பில் கடைசியாக மெய்யழகன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது இவரது நடிப்பில் சர்தார் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இதற்கிடையில் நடிகர் கார்த்தி வா வாத்தியார் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். அதேசமயம் கைதி 2 போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார் கார்த்தி. இதற்கிடையில் இவர் டாணாக்காரன் படத்தின் இயக்குனர் தமிழ் இயக்கத்தில் தனது 29 வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதன்படி இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. அதைத்தொடர்ந்து இந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படமானது இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறது என அப்டேட் வெளிவந்துள்ளது. மேலும் தற்காலிகமாக கார்த்தி 29 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பை 2025 மே மாதத்தில் தொடங்கி 2025 நவம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அடுத்தது இப்படத்தின் சில காட்சிகளை ராமேஸ்வரத்தில் கடலில் படமாக்கவும் படக்குழு முடிவு செய்துள்ளதாம்.
ஏனென்றால் கார்த்தி 29 திரைப்படம் 1960 காலகட்டத்தில் இருந்த கடல் கொள்ளையர்களைப் பற்றிய கதை தான் என்றும் இதன் காரணமாக பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் சில காட்சிகளை ராமேஸ்வரத்தில் கடலில் படமாக்க இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமில்லாமல் நடிகர் கார்த்தி இந்த படத்தில் நெகட்டிவ் ஷேடட் ரோலில் நடிப்பதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு இப்படம் தொடர்பாக வெளியாகும் தகவல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேன்மேலும் அதிகமாக்கி வருகிறது. எனவே இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.
- Advertisement -