Homeசெய்திகள்சினிமாசெப்டம்பர் மாதத்தில் வெளியாகும் கார்த்தி, அரவிந்த்சாமி கூட்டணியின் 'மெய்யழகன்'!

செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் கார்த்தி, அரவிந்த்சாமி கூட்டணியின் ‘மெய்யழகன்’!

-

கார்த்தி நடிக்கும் மெய்யழகன் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் கார்த்தி, அரவிந்த்சாமி கூட்டணியின் 'மெய்யழகன்'!

நடிகர் கார்த்தி ஜப்பான் திரைப்படத்திற்கு பிறகு தனது 26வது படமான வா வாத்தியார் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் தனது 27ஆவது படமான மெய்யழகன் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தில் இயக்குனர் பிரேம்குமார் இயக்கியிருக்கிறார். இதில் கார்த்தி உடன் இணைந்து அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், ஸ்வாதி கொண்டே ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க கோவிந்த் வசந்தா படத்திற்கு இசையமைத்துள்ளார். மகேந்திரன் ஜெயராஜூ இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். இப்படம் இரண்டு ஹீரோக்களின் கதையாகும்.செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் கார்த்தி, அரவிந்த்சாமி கூட்டணியின் 'மெய்யழகன்'! மேலும் இது எமோஷனல் கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பை ஏற்கனவே நிறைவடைந்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக படத்தின் அடுத்த அடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அதன்படி மெய்யழகன் திரைப்படம் 2024 செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ