Homeசெய்திகள்சினிமாகார்த்தி- அரவிந்தசாமி கூட்டணியில் உருவாகும் புதிய படம்!

கார்த்தி- அரவிந்தசாமி கூட்டணியில் உருவாகும் புதிய படம்!

-

நடிகர் கார்த்தியின் 27 ஆவது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கார்த்தி ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு ஜப்பான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை குக்கூ, ஜிப்ஸி, ஜோக்கர் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்குகிறார். இதை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார்.

இந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து அனு இமானுவேல், சுனில், விஜய் மில்டன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது.

இதைத் தொடர்ந்து கார்த்தி தனது 26 ஆவது படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் ‘சூது கவ்வும்’ படத்தை இயக்கிய நலன் குமாரசாமி இயக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தது. மேலும் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கார்த்தியின் 27 வது படத்தை ’96’படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்கவுள்ளார் என்று செய்திகள் பரவி வருகின்றன. இப்படத்தை சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் கூடுதல் தகவலாக, இந்தப் படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடிகர் அரவிந்த்சாமி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் முதன்முறையாக இணையும் இந்தப் படம் குறித்த செய்திகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரவிந்த்சாமி தனி ஒருவன், போகன் உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக மிரட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ