Homeசெய்திகள்சினிமாகார்த்தி, அரவிந்த்சாமி நடிக்கும் 'மெய்யழகன்'.... இன்று வெளியாகும் டீசர்!

கார்த்தி, அரவிந்த்சாமி நடிக்கும் ‘மெய்யழகன்’…. இன்று வெளியாகும் டீசர்!

-

கார்த்தி, அரவிந்த்சாமி நடிக்கும் மெய்யழகன் படத்தின் டீசர் குறித்த அறிவித்து வெளியாகி உள்ளது.கார்த்தி, அரவிந்த்சாமி நடிக்கும் 'மெய்யழகன்'.... இன்று வெளியாகும் டீசர்!

நடிகர் கார்த்தி ஜப்பான் திரைப்படத்திற்கு பிறகு வா வாத்தியார், மெய்யழகன் என இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்து வந்தார். தற்போது சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மெய்யழகன் திரைப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தது. அதன் பின்னர் இப்படமானது வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மெய்யழகன் திரைப்படத்தின் டீசர் (செப்டம்பர் 7) இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாலை 6 மணி அளவில் வெளியாகும் என படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த படத்தில் கார்த்தி உடன் இணைந்து நடிகர் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கார்த்தி, அரவிந்த்சாமி நடிக்கும் 'மெய்யழகன்'.... இன்று வெளியாகும் டீசர்!மேலும் ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா ஆகியோரின் நடித்துள்ளனர். இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் 2D நிறுவனம் தயாரிக்க 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கி இருக்கிறார். மகேந்திரன் ஜெயராஜூ இந்த படத்தில் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க கோவிந்த் வசந்தா இதற்கு இசையமைத்திருக்கிறார். இப்படமானது கிராமத்துக் கதை களத்தில் குடும்பப் பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல் டீசரும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ