கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவர் தற்போது பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் வா வாத்தியார் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அடுத்தது கார்த்தி 29, கைதி 2 ஆகிய படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் கார்த்தி. மேலும் இவர் இன்னும் சில இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் கார்த்தி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகிய இருவரும் சந்தித்ததாகவும் அப்போது கௌதம் மேனன் கார்த்தியிடம் ஒருவரி கதையை சொன்னதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்தது நடிகர் கார்த்தி, அந்த கதைக்கு ஓகே சொல்லிவிட்டு கதையை விரிவுபடுத்துமாறு கேட்டு இருப்பதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே வருங்காலத்தில் கார்த்தி, கௌதம் மேனன் கூட்டணியில் புதிய படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதை, வசனம் எழுதுவார் என்று தகவல் பரவி வருவதும் குறிப்பிடத்தக்கது.
- Advertisement -