Homeசெய்திகள்சினிமாவிரைவில் உருவாகும் தீரன் அதிகாரம் 2?

விரைவில் உருவாகும் தீரன் அதிகாரம் 2?

-

- Advertisement -

கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் இரண்டாம் பாகத்தை எச்.வினோத் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

எச்.வினோத் இயக்கத்தில் கார்த்தியின் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் தான் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இந்த படத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், அபிமன்யு சிங், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படம் கடந்த நவம்பர் 17-ஆம் தேதி 2017 அன்று வெளியானது.

ஆபரேஷன் பவேரியா வழக்கின் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டது. வெளி மாநிலத்திலிருந்து வரும் கொள்ளையர்கள் எப்படி தமிழகத்தில் கொள்ளையடித்தார் என்பதை மையமாக வைத்து இத்திரைப்படத்தின் கதை நகர்ந்தது. இந்த படத்தின் திரைக்கதையை சிறப்பான அமைந்திருந்த இயக்குனர் எச் வினோத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்தன. பிலிம் பேர் உள்ளிட்ட பல விருதுகளும் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்திற்கு குவின்தன.
இந்நிலையில், தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த கார்த்தியை வைத்தே இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க எச்.வினோத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ