Homeசெய்திகள்சினிமாதலைவர் 171ஆல் தள்ளிப்போன கார்த்தியின் கைதி 2!

தலைவர் 171ஆல் தள்ளிப்போன கார்த்தியின் கைதி 2!

-

கைதி இரண்டாம் பாகம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளிவந்த திரைப்படம் கைதி. இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து அர்ஜுன் தாஸ், ஜார்ஜ் மரியான், நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். லோகேஷ் கனகராஜ் எழுதி, இயக்கிய இரண்டாவது படமான கைதி திரைப்படம் லோகேஷ் கனகராஜுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
இந்த படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ் LCU என்ற சினிமாட்டிக் யுனிவர்ஸ் கான்செப்ட்டை கோலிவுட்டில் அறிமுகப்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து இவர் கமல்ஹாசனின் நடிப்பில் இயக்கிய விக்ரம் திரைப்படத்திலும் கைதி படத்தின் தொடர்பு இருந்தது. இதற்கிடையில் கைதி படத்தின் இரண்டாம் பாகத்தினை எதிர்பார்த்து பல ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதன்படி கைதி 2 திரைப்படம் இந்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவலின் படி, லியோ திரைப்படத்தை நிறைவு செய்த லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படத்தை ரஜினிகாந்த் நடிப்பில் தலைவர் 171 திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு (2024)அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் என சமீபத்தில் தகவல்கள் கசிந்திருந்தன.

அதனால் இந்த படத்தை முடித்துவிட்டு கைதி படத்தின் படப்பிடிப்பை வருகின்ற 2024 ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்குவார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

இதில் கார்த்தி உடன் இணைந்து ஹரிஷ் உத்தமன் மற்றும் அர்ஜுன் தாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். மேலும் கைதி 2 படத்தில் நடிகர் சூர்யாவை ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் பார்க்கலாம் என்றும் விக்ரம், லியோ உள்ளிட்ட திரைப்படங்களின் தொடர்பு கைது இரண்டாம் பாகத்தில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ