Homeசெய்திகள்சினிமாமசாலா படங்களுக்கு ட்ரிபியூட்... கார்த்தி-நலன் கூட்டணியின் புதிய அப்டேட்!

மசாலா படங்களுக்கு ட்ரிபியூட்… கார்த்தி-நலன் கூட்டணியின் புதிய அப்டேட்!

-

கார்த்தி தனது அடுத்த படத்தில் நலன் குமாரசாமி உடன் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

கார்த்தியின் 25வது படமான ‘ஜப்பான்‘ படத்தை ‘ஜோக்கர்’ ‘ஜிப்சி’ ‘குக்கூ’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கி வருகிறார். இப்படத்தில் சுனில், விஜய் மில்டன், அனு இம்மானுவேல் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று திரைக்கு வரும் என சில நாட்களுக்கு முன் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் கார்த்தியின் அடுத்த படத்தை நலன் குமாரசாமி இயக்க இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது.

நலன் குமாரசாமி கடந்த 2013 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ‘சூது கவ்வும்’ திரைப்படத்தினை இயக்கினார். டார்க் காமெடி படமான ‘சூது கவ்வும்’ திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதைத்தொடர்ந்து 2016 ஆம் ஆண்டில் மீண்டும் விஜய் சேதுபதி உடன் இணைந்து இயக்கிய காதலும் கடந்து போகும் ரசிகர்களுடைய வரவேற்பு பெற்றது.

தற்போது அவர் கார்த்தியின் 26-வது படத்தை இயக்க உள்ளார். தெலுங்கு நடிகை கிருத்தி ஷெட்டி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் இந்த படம் மசாலா படமாக உருவாகிறது என்றும் ‘மசாலா படங்களுக்கு ட்ரிபியூட்’ என்ற அறிவிப்போடு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த மார்ச் மாதத்தின் இறுதியில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியிருந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

MUST READ