Homeசெய்திகள்சினிமாகார்த்தி, அரவிந்த்சாமி கூட்டணியின் 'மெய்யழகன்'.... ரிலீஸ் அப்டேட் இதோ!

கார்த்தி, அரவிந்த்சாமி கூட்டணியின் ‘மெய்யழகன்’…. ரிலீஸ் அப்டேட் இதோ!

-

கார்த்தி, அரவிந்த்சாமி கூட்டணியில் உருவாகியுள்ள மெய்யழகன் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.கார்த்தி, அரவிந்த்சாமி கூட்டணியின் 'மெய்யழகன்'.... ரிலீஸ் அப்டேட் இதோ!நடிகர் கார்த்தி ஜப்பான் படத்திற்கு பிறகு நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் மெய்யழகன் எனும் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். இதில் கார்த்தியுடன் இணைந்து அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சூர்யாவின் 2D என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க கோவிந்த் வசந்தா இதற்கு இசையமைத்துள்ளார். மகேந்திரன் ஜெயராஜூ ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படமானது இரண்டு கதாநாயகர்களின் கதையாகும். அந்த வகையில் இப்படம் எமோஷனல் கலந்த குடும்ப படமாக உருவாகியுள்ளது. கார்த்தி, அரவிந்த்சாமி கூட்டணியின் 'மெய்யழகன்'.... ரிலீஸ் அப்டேட் இதோ!மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடிகர் கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதன்படி மெய்யழகன் திரைப்படம் 2024 ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்று புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ