Homeசெய்திகள்சினிமாதன்னார்வலர்களுக்கு உதவித்தொகை... கௌரவப்படுத்திய நடிகர் கார்த்தி...

தன்னார்வலர்களுக்கு உதவித்தொகை… கௌரவப்படுத்திய நடிகர் கார்த்தி…

-

- Advertisement -
25 தன்னார்வலர்களை தேர்வு செய்து தலா ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினார் நடிகர் கார்த்தி.

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் கார்த்தி. பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, சகுனி, கைதி, தம்பி, சுல்தான் உள்பட 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கார்த்தி நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஜப்பான். இத்திரைப்படம் கார்த்தியின் 25-வது படமாகும்.

இத்திரைப்படத்தை ராஜூ முருகன் இயக்கியிருந்தார். ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு இசை அமைத்தார். இத்திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பட வெளியீட்டுக்கு முன்பாகவே, தனது 25 வது படத்தை முன்னிட்டு தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதாக நடிகர் கார்த்தி அறிவித்திருந்தார். அதன்படி, தேர்வு செய்யப்பட்ட 25 தன்னார்வலர்களுக்கு அவர் உதவித்தொகை வழங்கி உள்ளார்.

இதற்காக நடைபெற்ற விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணம் பலருக்கு உள்ளது. ஆனால், யார் மூலம் உதவி செய்வது என்று தெரியவில்லை. இப்படி பலர் இந்த சமூகத்தில் உள்ளனர். அவர்களை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் தான் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பணி தொடர வேண்டும் எனவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, 25 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அவர் ஊக்கத்தொகை வழங்கி கௌரவப்படுத்தினார்.

MUST READ