Homeசெய்திகள்சினிமாசூர்யாவின் 'கங்குவா' படத்தில் நடிக்கும் கார்த்தி..... லேட்டஸ்ட் அப்டேட்!

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தில் நடிக்கும் கார்த்தி….. லேட்டஸ்ட் அப்டேட்!

-

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கங்குவா. மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். சூர்யாவின் 'கங்குவா' படத்தில் நடிக்கும் கார்த்தி..... லேட்டஸ்ட் அப்டேட்!தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைக்கிறார். 3D தொழில்நுட்பத்தில் வரலாற்று சரித்திர படமாக இந்த படம் உருவாகி வருகிறது. இதில் சூர்யாவிற்கு வில்லனாக பாபி தியோல் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து திஷா பதானி , நட்டி நடராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சூர்யாவின் 'கங்குவா' படத்தில் நடிக்கும் கார்த்தி..... லேட்டஸ்ட் அப்டேட்! அதே சமயம் இந்த படமானது வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வரும் கங்குவா திரைப்படமானது இரண்டு பாகங்களாக உருவாகிறது என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. அதன்படி கங்குவா முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்திற்கு லீட் கொடுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.சூர்யாவின் 'கங்குவா' படத்தில் நடிக்கும் கார்த்தி..... லேட்டஸ்ட் அப்டேட்! இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் கார்த்தி, சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்றும் அவருடைய கதாபாத்திரம் இரண்டாம் பாகத்திற்கான லீடாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. சூர்யாவும், கார்த்தியும் ஏற்கனவே கைதி 2 திரைப்படத்தில் இணைந்து நடிப்பார்களா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது கங்குவா திரைப்படத்தில் இருவரும் இணையும் தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் கங்குவா திரைப்படத்தின் முதல் பாடல் நாளை (ஜூலை 23) சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ