இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, அசுரன் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அதை தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படம் பெரும் வெற்றி பெற்ற நிலையில் விடுதலை 2 திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி நடை போட்டு வருகிறது. இதை தொடர்ந்து வெற்றிமாறன், சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து இயக்குனர் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதே சமயம் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.
இதற்கிடையில் நடிகர் சூர்யா, வாடிவாசல் திரைப்படத்திற்காக காளைகளை அடக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக தொடங்கப்படாமல் இருக்கிறது. மேலும் அடுத்த ஆண்டு மாட்டுப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அதை தொடர்ந்து படப்பிடிப்புகள் தொடங்கப்படலாம் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பிரபல இயக்குனர் தமிழ் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் வாடிவாசல் திரைப்படம் குறித்து பேசி உள்ளார். வெற்றிமாறன் வாடிவாசல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தன்னை கேட்டிருப்பதாக கூறியுள்ளார். அத்துடன் தான் அடுத்ததாக இயக்க இருக்கும் கார்த்தி 29 திரைப்படமும் வாடிவாசல் படப்பிடிப்புடன் மோதாமல் இருக்கும் என தான் நம்புவதாகவும் கூறியுள்ளார்.
பிரபல இயக்குனரும் நடிகருமான தமிழ் ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை 1 மற்றும் 2 ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.