Homeசெய்திகள்சினிமாஅயலான், கேப்டன் மில்லர், ஜிகர்தண்டா 2 படங்களுடன் தீபாவளி ரேஸில் குதித்த 'ஜப்பான்'… கார்த்தி பிறந்தநாளுக்கு...

அயலான், கேப்டன் மில்லர், ஜிகர்தண்டா 2 படங்களுடன் தீபாவளி ரேஸில் குதித்த ‘ஜப்பான்’… கார்த்தி பிறந்தநாளுக்கு ட்ரீட்

-

கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ஜப்பான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி கடைசியாக , மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வந்தியத்தேவனாக வந்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.

அவர் தற்போது இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ படத்தில் நடித்து வருகிறார்.

ஜப்பான் கார்த்தியின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் இந்த திரைப்படம், நடிகர் இரட்டை வேடங்களில் நடிக்கும் ஒரு சுவாரஸ்யமான ஹெய்ஸ்ட் த்ரில்லர் என்று கூறப்படுகிறது.

நடிகர் கார்த்தி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அதையடுத்து அவருக்கு ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கார்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் ஜப்பான் படக் குழுவினர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்துள்ளனர். வரும் தீபாவளிக்கு இந்த படம் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் ஏற்கனவே தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படமும் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகமும் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் ஜப்பான் திரைப்படமும் தீபாவளி ரேசில் இணைந்துள்ளது.

 

MUST READ