Homeசெய்திகள்சினிமா'வீர தீர சூரன்' படத்தில் அந்த ஒரு சம்பவம்.... படக்குழுவின் உழைப்பை பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

‘வீர தீர சூரன்’ படத்தில் அந்த ஒரு சம்பவம்…. படக்குழுவின் உழைப்பை பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

-

- Advertisement -

வீர தீர சூரன் படக்குழுவினரை கார்த்திக் சுப்பராஜ் பாராட்டியுள்ளார்.'வீர தீர சூரன்' படத்தில் அந்த ஒரு சம்பவம்.... படக்குழுவின் உழைப்பை பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

விக்ரம் நடிப்பில் நேற்று (மார்ச் 27) திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் வீர தீர சூரன். இந்த படம் வீர தீர சூரன் பாகம் 2 என்ற தலைப்பில் வெளியானது. அதாவது இப்படத்தின் இயக்குனர் அருண்குமார் முதலிலேயே இரண்டாம் பாகத்தை வெளியிட்டுள்ளார். இவருடைய இந்த வித்தியாசமான முயற்சி பாராட்டப்படுகிறது. அதேபோல் விக்ரம், சுராஜ், எஸ். ஜே. சூர்யா ஆகியோரின் மிரட்டலான நடிப்பும் பெரிய அளவில் பேசப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இவர்களின் நடிப்பு ஒரு பக்கம் படத்தை தாங்கிப் பிடித்திருந்தாலும் மற்றொரு பக்கம் அவர்களின் நடிப்பை பிசிறு தட்டாமல் தனது இசையினால் பார்வையாளர்களுக்கு கடத்தியுள்ளார் ஜிவி பிரகாஷ். இந்த படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே அதிகமான எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் நேற்று காலையில் இருந்து காத்திருந்த ரசிகர்களுக்கு தரமான விருந்து படைத்துள்ளது வீர தீர சூரன். முதல் நாளிலேயே வசூலை அள்ளி உள்ளது. வரும் நாட்கள் தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் வசூலை வாரிக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்து கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். 'வீர தீர சூரன்' படத்தில் அந்த ஒரு சம்பவம்.... படக்குழுவின் உழைப்பை பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!அந்த பதிவில், “நான் எழுதுவது நடந்தே தீரும். சியான் விக்ரம் திரையரங்குகளில் அதிரடி கிளப்பியுள்ளார். குறிப்பாக அந்த ஒரு சம்பவம். வீர தீர சூரன் என்பது நன்றாக எழுதப்பட்ட, அற்புதமாக உருவாக்கப்பட்ட ராவான அதிரடி திரில்லர் படம். அனைவரும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இயக்குனர் அருண்குமார் எல்லா வழிகளிலும் ஜொலிக்கிறார். எஸ்.ஜே. சூர்யா, சுராஜ், துஷாரா, ஜி.வி. பிரகாஷ், தேனி ஈஸ்வர் ஒட்டுமொத்த படக்குழுவினரும் நன்றாக பணியாற்றி இருக்கிறீர்கள். இந்த படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ