Homeசெய்திகள்சினிமா'விடாமுயற்சி' படக்குழுவினரை வாழ்த்திய கார்த்திக் சுப்புராஜ்!

‘விடாமுயற்சி’ படக்குழுவினரை வாழ்த்திய கார்த்திக் சுப்புராஜ்!

-

- Advertisement -

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் விடாமுயற்சி படக்குழுவினரை வாழ்த்தி உள்ளார்.'விடாமுயற்சி' படக்குழுவினரை வாழ்த்திய கார்த்திக் சுப்புராஜ்!

கார்த்திக் சுப்பராஜ் தமிழ் சினிமாவில் வலம் வரும் டிரெண்டிங் இயக்குனர்களில் ஒருவராவார். அந்த வகையில் இவரது இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா, பேட்ட, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. அடுத்தது இவரது இயக்கத்தில் ரெட்ரோ எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. சூர்யா, பூஜா ஹெக்டே ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் 2025 மே 1 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் விடாமுயற்சி படக் குழுவினரை வாழ்த்தி பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ” விடாமுயற்சி படம் ஒரு சுவாரசியமான ஆக்சன் திரில்லர் படம். தொழில்நுட்ப ரீதியாக சிறப்பான ஆக்ஷன் காட்சிகளுடனும், அஜித் சார், திரிஷா மேடம், அர்ஜுன் சார் ஆகியோர்களின் அருமையான நடிப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குனர் மகிழ் திருமேனி, லைக்கா நிறுவனத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள். அனிருத் மற்றும் ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துக்கள். இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்க அனைவரையும் வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு ஆண்டுகள் கழித்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் இன்று (பிப்ரவரி 6) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் படத்தை காண திரையரங்கிற்கு திரண்டு வந்து படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ