சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் லால் சலாம். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரஜினி, மொய்தீன் பாயாக சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதில் ரஜினியின் மனைவியாக நிரோஷா நடித்திருந்தார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்றைய காலகட்டத்தில் சொல்லத் தயங்கும் விஷயத்தை மிகத் துணிச்சலாக லால் சலாம் படத்தின் மூலம் சொல்லி இருக்கிறார். மேலும் மதத்தினை வைத்து அரசியல் ஆதாயம் தேடுபவர்களுக்கு இப்படம் நல்ல பாடமாக அமைந்துள்ளது. அதே சமயம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான லால் சலாம் திரைப்படம் மத நல்லிணக்கத்தை பேசக்கூடிய படமாக அமைந்து பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.
Thalaivar as #MoideenBhai was Super treat to watch in #LalSalaam 👌👌🔥🔥🔥❤️❤️
Well done dir @ash_rajinikanth & whole team for telling this story based on real incident that shows the need of Religious Harmony amongst us 👏👏👌👌@arrahman sir @TheVishnuVishal @vikranth_offl… pic.twitter.com/hFEUzbNwIi
— karthik subbaraj (@karthiksubbaraj) February 9, 2024
அந்த வகையில் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் லால் சலாம் பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், “லால் சலாம் படத்தில் மொய்தீன் பாயாக தலைவரை பார்ப்பது சூப்பர் ட்ரீட். உண்மை சம்பவத்தின் அடிப்படையில் மத நல்லிணக்கத்தை எடுத்துக் கூறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ஒட்டுமொத்த பட குழுவுக்கும் என் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.