வைபவ் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் கார்த்திக் சுப்பராஜ் பீட்சா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அந்த வகையில் அடுத்தது இவரது நடிப்பில் ரெட்ரோ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் இவர் பல படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் தற்போது வைபவ் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். நடிகர் வைபவ் கடைசியாக தளபதி விஜயின் கோட் படத்தில் நடித்திருந்த நிலையில் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படத்தையும் கைவசம் வைத்துள்ளார். அடுத்தது இவர் பெருசு எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் எம்பர் லைட் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தினை இளங்கோ ராம் இயக்க சத்ய திலகம் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். அருண் ராஜ் இசையமைக்கிறார். இந்த படத்தில் வைபவ் தவிர சுனில், பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, தீபா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் இறுதிச் சடங்கு சம்பந்தமான கதைக்களத்தில் காமெடி கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகிறது. தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ், வைபவ் நடிப்பில் வெளியான மேயாத மான், பபூன் போன்ற படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.