Homeசெய்திகள்சினிமாசர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்!

சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்!

-

- Advertisement -
kadalkanni

கார்த்திக் சுப்பராஜ் பீட்சா, இறைவி , பேட்ட போன்ற படங்களின் மூலம் கவனம் பெற்றவர். இவர் கடந்த 2014 இல் ஜிகர்தண்டா எனும் திரைப்படத்தை இயக்கினார்.சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்! இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜிகர்தண்டா படத்தில் இரண்டாம் பாகத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.

கடந்த நவம்பர் 10 தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா, நிமிஷா ஷஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சினிமாவிற்கு சம்பந்தமே இல்லாம இரு நபர்கள் சினிமாவை மக்கள் மத்தியில் எப்படி ஆயுதமாக மாற்றுகிறார்கள் என்பது குறித்து பேசியை படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இப்படம் வெளியாகி பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்றது மட்டுமல்லாமல் 70 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் சர்வதேச அளவில் நடைபெறும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் லைம்லைட் எனும் பிரிவில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் தேர்வாகியுள்ளது. இவ்விழா 2024 ஜனவரி 5 முதல் பிப்ரவரி 4 வரை நடைபெற இருக்கிறது.

மேலும் இதுபோல வெற்றிமாறனின் விடுதலை திரைப்படமும்,சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்! ராமின் ஏழு கடல் ஏழு மலை திரைப்படமும் தேர்வாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ