பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான பீட்சா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமிமேனன் ஆகியோரின் நடிப்பில் ஜிகர்தண்டா திரைப்படத்தை இயற்றினார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன் பிறகு இறைவி, பேட்ட உள்ளிட்ட படங்களை கொடுத்து மக்கள் மனதில் நிலையான இடம் பிடித்தார்.
இந்நிலையில் ரஜினியின் பேட்ட படத்திற்கு பிறகு நான்கு வருடங்கள் கழித்து ஒரு தரமான கதையை தயார் செய்து வைத்திருந்தார். அந்த படம் தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா மற்றும் பலர் நடித்திருந்தனர். தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் 50 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் மாபெரும் வெற்றியை படக்குழுவினர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். அதேசமயம் கார்த்திக் சுப்புராஜ், ” பேட்ட படத்திற்குப் பிறகு என்னுடைய படம் எதுவும் வெளியாகவில்லை. நான்கு வருடங்கள் காத்திருந்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் வெற்றி அடையும் என்று நம்பிக்கையாக இருந்தேன். ஆனாலும் எனக்கு பதற்றமாக இருந்தது. தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு கிடைத்த வெற்றிக்கு வாழ்த்து கூறியவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றிக்காக தான் நான்கு ஆண்டுகளாக காத்திருந்தேன்” என்று நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.