Homeசெய்திகள்சினிமாகார்த்தி- ராஜுமுருகன் கூட்டணியின் 'ஜப்பான்'... பிரம்மாண்ட செட்டில் படப்பிடிப்பு!

கார்த்தி- ராஜுமுருகன் கூட்டணியின் ‘ஜப்பான்’… பிரம்மாண்ட செட்டில் படப்பிடிப்பு!

-

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு கார்த்தி தனது 25வது படமான ‘ஜப்பான்’ திரைப்படத்தில் நடிக்கிறார்.இப்படத்தில் கார்த்தியுடன் அனு இமானுவேல், சுனில், விஜய் மில்டன், மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை குக்கூ, ஜிப்ஸி, ஜோக்கர் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்குகிறார். ஒரு ஹெய்ஸ்ட் த்ரில்லர் கதைக் களத்தில் உருவாகி வரும் இந்த படம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாராகி வருகிறது. மேலும் இதற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார்.

கார்த்தி இரட்டை இடங்களில் நடிக்கும் இந்த படத்தின் முன்னோட்ட வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

மேலும் தூத்துக்குடி பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. தற்போது சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 200 குடில்கள் கொண்ட பிரம்மாண்டமான கிராமம் செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஜப்பான் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே படமாக்கப்பட உள்ளது என்றும் இதன் படப்பிடிப்பு ஜூன் 24ஆம் தேதி முழுமையாக முடிந்துவிடும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

MUST READ