கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் 6 வருடங்களை நிறைவு செய்துள்ளது.நடிகர் கார்த்தி தற்போது தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார். அந்த வகையில் மெய்யழகன், வா வாத்தியார், சர்தார் 2 போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் கார்த்தி நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் ஆறு வருடங்களை நிறைவு செய்துள்ளது. பாண்டிராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் கார்த்தி, சாயிஷா, சத்யராஜ், சூரி, பானுப்பிரியா, பிரியா பவானி சங்கர் போன்ற பலரும் நடித்திருந்தனர். நடிகர் சூர்யாவின் 2D என்டேர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. டி இமான் படத்திற்கு இசையமைத்திருந்தார். வேல்ராஜ் கோடி பதிவு செய்திருந்தார். 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று கிட்டதட்ட 70 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது.
A tale of family values, emotions and love turns 6 💖#6YearsOfKadaikuttySingam#KadaikuttySingam @Karthi_Offl @Suriya_offl @pandiraj_dir @sayyeshaa @immancomposer @rajsekarpandian @sooriofficial @SakthiFilmFctry @sakthivelan_b @SonyMusicSouth @knackstudios_ pic.twitter.com/vt1JrCXNWt
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) July 13, 2024
காமெடி, எமோஷனல், காதல் என கலகலப்பான குடும்ப பொழுதுபோக்கு படமாக வெளியான இந்த படம் பலரின் பேவரைட் படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த படம் ஆறு வருடங்களை கடந்துள்ள நிலையில் படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.