Homeசெய்திகள்சினிமாகூலி படத்துடன் மோதும் கார்த்தியின் 'சர்தார் 2'.... ரிலீஸ் குறித்த புதிய தகவல்!

கூலி படத்துடன் மோதும் கார்த்தியின் ‘சர்தார் 2’…. ரிலீஸ் குறித்த புதிய தகவல்!

-

- Advertisement -

கார்த்தியின் சர்தார் 2 படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.கூலி படத்துடன் மோதும் கார்த்தியின் 'சர்தார் 2'.... ரிலீஸ் குறித்த புதிய தகவல்!

நடிகர் கார்த்தி கடைசியாக மெய்யழகன் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில், அதேசமயம் நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதற்கிடையில் இவர், பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பி.எஸ். மித்ரன் இயக்க யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கிறார். ஸ்பை திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான சர்தார் படத்தின் மாபெரும் வெற்றி சர்தார் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கூலி படத்துடன் மோதும் கார்த்தியின் 'சர்தார் 2'.... ரிலீஸ் குறித்த புதிய தகவல்!இந்நிலையில் இந்த படத்தினை 2025 ஆகஸ்ட் மாதத்தில் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த படத்தின் டீசரை 2025 மே மாதம் 25ஆம் தேதி கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் இனிவரும் நாட்களில் படத்தின் ரிலீஸ் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் கூலி திரைப்படமும் 2025 ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என தகவல்கள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

MUST READ