சர்தார் 2 படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது.
கார்த்தி நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு சர்தார் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் மிரட்டி இருந்தார். பிஎஸ் மித்ரன் இயக்கி இருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு தற்போது சர்தார் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தைப் போல் இரண்டாம் பாகமும் ஸ்பை திரில்லர் ஜானரில் உருவாகி வருகிறது. இதனை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஷாம்.சி.எஸ் இதற்கு இசையமைக்கிறார். இதில் கார்த்தியுடன் இணைந்து மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த எஸ்.ஜே. சூர்யா படத்தில் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் படத்தின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதன்படி தற்போதைய இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முன்னோட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் அப்பா கார்த்தியின் ஆக்ஷன் காட்சிகள் காட்டப்படுகின்றன. மேலும் எஸ்.ஜே. சூர்யா காட்டப்படுகிறார். மிரட்டலான பின்னணி இசையுடன் வெளியாகி உள்ள இந்த முன்னோட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படமானது 2025 தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.