Homeசெய்திகள்சினிமாதீபாவளி தினத்தை குறி வைக்கும் கார்த்தியின் 'சர்தார் 2'!

தீபாவளி தினத்தை குறி வைக்கும் கார்த்தியின் ‘சர்தார் 2’!

-

- Advertisement -

சர்தார் 2 திரைப்படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என புதிய தகவல் வெளிவந்துள்ளது.தீபாவளி தினத்தை குறி வைக்கும் கார்த்தியின் 'சர்தார் 2'!

கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சர்தார் திரைப்படம் வெளியானது. பி.எஸ். மித்ரன் இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து பி.எஸ். மித்ரன், கார்த்தி கூட்டணி மீண்டும் இணைந்து சர்தார் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. ஸ்பை த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கிறார். இதில் கார்த்தியுடன் இணைந்து மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடிக்கிறார். ஏற்கனவே இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. தீபாவளி தினத்தை குறி வைக்கும் கார்த்தியின் 'சர்தார் 2'!அதேசமயம் இன்று (மார்ச் 10) இப்படத்தின் டப்பிங் பணிகளையும் படக்குழு தொடங்கி உள்ளது. மேலும் வருகின்ற மே மாதம் கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் டீசர் வெளியாகலாம் எனவும் செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், சர்தார் படத்தின் முதல் பாகம் தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் சர்தார் 2 திரைப்படத்தையும் தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது. எனவே 2025 தீபாவளி தினத்தை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரும் எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ