பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கார்த்தி தனது அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். கடைசியாக கார்த்தி நடிப்பில் வெளியான ஜப்பான் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. அதைத் தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்திக் 26 படத்திலும் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்திக் 27 படத்திலும் ஒரே சமயத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்த படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கார்த்தி நடிக்க உள்ள சர்தார் 2 படத்தின் அப்டேட்டுகள் கிடைத்துள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் சர்தார். இப்படத்தை பி எஸ் மித்ரன் இயக்கியிருந்தார். ராஷி கண்ணா, லைலா, முனிஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார். அரசியல் பின்னணியில் ஸ்பை ஆக்சன் திரில்லர் கதை களத்தில் உருவாகியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சர்தார் இரண்டாம் பாகத்தினை உருவாக்க பட குழுவினர் திட்டமிட்டிருந்தனர். தற்போது இதன் கூடுதல் தகவல்களாக பி எஸ் மித்ரன், சர்தார் 2 படத்தின் ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளை நிறைவு செய்துவிட்டார் எனவும் 2024 ஏப்ரல் மாதத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் யுவன் சங்கர் ராஜா சர்தார் 2 படத்தில் இசையமைப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. எனினும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து கார்த்தி தீரன் 2, கைதட்டு ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.