வா வாத்தியார் படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் கார்த்தி கடைசியாக மெய்யழகன், கங்குவா ஆகிய படங்களில் நடித்திருந்தார். அதே சமயம் இவர் சர்தார் 2 படத்திலும் நடித்து வருகிறார். மேலும் கைதி 2, கார்த்தி 29 ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் இவர், வா வாத்தியார் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க நலன் குமாரசாமி இப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து ராஜ்கிரண், கிரித்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர் சத்யராஜ் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் (பிப்ரவரி 14) காதலர் தினத்தை முன்னிட்டு இன்று மாலை 5.30 மணி அளவில் இந்த படத்தில் இருந்து ‘உயிர் பத்திக்காம’ எனும் முதல் பாடல் வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த பாடல் கார்த்தி மற்றும் கிரித்தி ஷெட்டி ஆகிய இருவருக்கமான காதல் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -