Homeசெய்திகள்சினிமாபொங்கல் ரேஸில் இணையும் கார்த்தியின் 'வா வாத்தியார்' திரைப்படம்!

பொங்கல் ரேஸில் இணையும் கார்த்தியின் ‘வா வாத்தியார்’ திரைப்படம்!

-

கார்த்தியின் வா வாத்தியார் திரைப்படம் பொங்கல் ரேஸில் இணைவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.பொங்கல் ரேஸில் இணையும் கார்த்தியின் 'வா வாத்தியார்' திரைப்படம்!

நடிகர் கார்த்தி தற்போது சர்தார் 2, கார்த்தி 29 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். அதே சமயம் இவரது நடிப்பில் கடைசியாக மெய்யழகன் எனும் திரைப்படம் வெளியானது. 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கியிருந்த இந்த படம் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதற்கிடையில் நடிகர் கார்த்தி தனது 26 ஆவது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தினை சூது கவ்வும், காதலும் கடந்து போகும் ஆகிய படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்குகிறார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்க இவர்களுடன் இணைந்து ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடிகர் கார்த்தி எம்ஜிஆரின் தீவிர ரசிகனாக நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பொங்கல் ரேஸில் இணையும் கார்த்தியின் 'வா வாத்தியார்' திரைப்படம்!அதே சமயம் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏறத்தாழ நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி வா வாத்தியார் திரைப்படமானது அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகும் என்று புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அனேகமாக பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த படம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விடாமுயற்சி, கேம் சேஞ்சர் போன்ற படங்கள் 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ