இயக்குனர் தங்கர் பச்சான் நீண்ட காலங்களுக்குப் பிறகு ‘ கருமேகங்கள் கலைகின்றன’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன், யோகி பாபு, எஸ் ஏ சந்திரசேகர், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தினை விஏயு மீடியா என்டெர்டெயிமென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தங்கர் பச்சானின் முந்தைய திரைப்படங்களான அழகி, சொல்ல மறந்த கதை, ஒன்பது ரூபாய் நோட்டு, பள்ளிக்கூடம் உள்ளிட்ட படங்கள் சிறுகதைகளை தழுவி உருவாக்கப்பட்டிருந்தது. அதுபோலவே, இந்தத் திரைப்படமும் ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன’ என்ற சிறுகதையை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பே இந்த படத்தில் இருந்து ‘செவ்வந்திப் பூவே’ என்னும் பாடல் வெளியாகி இருந்தது.
தற்போது ‘சுத்தமுள்ள நெஞ்சம்’ எனும் பாடல் வெளியாகி உள்ளது.
கவிஞர் வைரமுத்து எழுதி, பாடகி சைந்தவி பாடிய இப்பாடலானது மனதை வருடும் விதமாக அமைந்துள்ளது. மேலும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.