Homeசெய்திகள்சினிமாகருணாகரன் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்..... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

கருணாகரன் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்….. ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

-

கவுண்டமணி, வடிவேலுவிற்கு பிறகு நகைச்சுவை நடிகர்கள் பலர் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சந்தானம், யோகி பாபு உள்ளிட்டோர் ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் நடிகர் சதீஷ் கூட ஹீரோவாக புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். அந்த வரிசையில் தற்போது நடிகர் கருணாகரனும் இணைந்துள்ளார்.

இவர் ஜிகர்தண்டா, யாமிருக்க பயமே, கலகலப்பு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘குற்றச்சாட்டு‘ எனும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் விமல் விஷ்ணு இயக்கியுள்ளார். டிவைன் பிளாக்பஸ்டர் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆர் கே நிதின் சேகர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சுரேஷ் நந்தன் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது.

இதன் மூலம் இந்த படம் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இப்படம் விரைவில் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

MUST READ