Homeசெய்திகள்சினிமாகருணாநிதி- தமிழ்- சினிமா - அரசியல் பிரிக்கவே முடியாதவை.... கலைஞரின் நினைவலைகளை பகிர்ந்த கமல்!

கருணாநிதி- தமிழ்- சினிமா – அரசியல் பிரிக்கவே முடியாதவை…. கலைஞரின் நினைவலைகளை பகிர்ந்த கமல்!

-

கருணாநிதி- தமிழ்- சினிமா - அரசியல் பிரிக்கவே முடியாதவை.... கலைஞரின் நினைவலைகளை பகிர்ந்த கமல்!கலைஞர் கருணாநிதி அவர்கள் அரசியலிலும், திரைத் துறையிலும் ஆற்றிய பங்கு அளவில்லாதது. அந்த வகையில் திரை உலகில் அவர் ஆட்சிய பங்களிப்பிற்காக நன்றி தெரிவிக்கும் வகையில் கலைத்துறையினர்கள் பலரும் சேர்ந்து அறிஞர் 100 விழாவை மிகப் பிரம்மாண்டமாக நேற்று கொண்டாடினர். சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மயானத்தில் நடந்த இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் ரஜினி சூர்யா கார்த்தி தனுஷ் ஜெயம் ரவி நயன்தாரா உள்ளிட்ட நடிகர்களும் தயாரிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.கருணாநிதி- தமிழ்- சினிமா - அரசியல் பிரிக்கவே முடியாதவை.... கலைஞரின் நினைவலைகளை பகிர்ந்த கமல்!

இந்த விழாவில் அனைவரும் மேடையில் ஏறி கலைஞர் குறித்து புகழாரம் சூட்டினார். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன், “சினிமாவில் இருக்கும் போது அரசியலையும் அரசியலில் இருக்கும் போது சினிமாவையும் மறக்காமல் இருந்தவர் கருணாநிதி. அவர் தன்னையும் வளர்த்து தமிழையும் வளர்த்து தமிழ் நாட்டையும் வளர்த்தார். கருணாநிதி இல்லை என்றாலும் அவர் எனக்கு சூட்டிய கலைஞானி என்ற பட்டம் என்னை தொடரும். என்னுடைய தமிழ் ஆசான்கள் கருணாநிதி. எம் ஜி. ஆர் சிவாஜி. எம்ஜிஆர், சிவாஜி என்ற இரு ஆளுமைகளையும் தனது வசனங்களால் உச்ச நட்சத்திரங்களாக மாற்றியவர் கலைஞர். தமிழும் கருணாநிதியும் சினிமாவும் கருணாநிதியும் அரசியலும் கருணாநிதியும் பிரிக்கவே முடியாதவை. கருணாநிதியின் பண்பு முதல்வர் ஸ்டாலின் இடமும் இருக்கிறது. நெருங்கிய நண்பர் விஜயகாந்த் இறுதி சடங்கை சிறப்பான முறையில் நடத்தி தந்தமைக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசினார்.

MUST READ