Homeசெய்திகள்சினிமாநமக்கான வாய்ப்புகளை நாம் தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.... நடிகர் கருணாஸ்!

நமக்கான வாய்ப்புகளை நாம் தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்…. நடிகர் கருணாஸ்!

-

நடிகர் கருணாஸ் நடிகராகவும் அரசியல்வாதியாகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர். இவர் ஆரம்பத்தில் நந்தா, வில்லன், பாபா, குத்து போன்ற ஏராளமான படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து பெயர் பெற்றார். நமக்கான வாய்ப்புகளை நாம் தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.... நடிகர் கருணாஸ்!அதேசமயம் திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திர அம்பானி போன்ற படங்களை ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். இருப்பினும் சமீப காலமாக கருணாஸுக்கு எதிர் பார்த்த அளவில் பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இந்நிலையில் தான் நடிகர் கருணாஸ் நடிகர் விமலுடன் இணைந்து போகுமிடம் வெகு தூரமில்லை
ல்லை எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். நமக்கான வாய்ப்புகளை நாம் தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.... நடிகர் கருணாஸ்!இந்த படத்தை அறிமுக இயக்குனர் மைக்கேல் கே ராஜா இயக்குகிறார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்து சில தினங்களுக்கு முன்பாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்லும் பயணம் சம்பந்தமான கதை தான் இந்த படத்தின் மையக்கரு. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன்படி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. நமக்கான வாய்ப்புகளை நாம் தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.... நடிகர் கருணாஸ்!அந்நிகழ்ச்சியில் பேசிய கருணாஸ், “திரைத்துறையில் நமக்கான வாய்ப்புகளை நாம் தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த படத்தில் இயக்குனர் மைக்கேல் என்னையும் விமலையும் மிகவும் வித்தியாசமாக காட்டியிருக்கிறார். ஹீரோவுடன் நான் நடித்த மற்ற படங்களைப் போல இந்த படமும் வெற்றி பெரும்” என தெரிவித்துள்ளார்.

MUST READ