மதயானைக் கூட்டம் படத்தின் மூலம் அறிமுகமாகி நல்ல பெயரை சம்பாதித்த இளம் நடிகர் தான் கதிர். தொடர்ந்து கிருமி, விக்ரம் வேதா என பல படங்களில் நடித்திருந்தாலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான “பரியேறும் பெருமாள்”, விமர்சகர்கள் மத்தியிலும் வசூல் ரீதியிலும் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. அதன் பின்னர் விஜய் நடிப்பில் வெளியான பிகில், அமேசான் பிரைமில் வெளியான சுழல் சீரிசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது இவர் நடிப்பில் வெளியாக உள்ள புதிய படமான “மாணவன்” படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. போராடும் கல்லூரி மாணவர்களின் லீடராக, புல்லட் பைக்கில் அமர்ந்து கொண்டு, முரட்டுத்தனமான கோபம் நிறைந்த பார்வையுடன் இந்த போஸ்டரில் கதிர் காட்சியளிக்கிறார். படத்தின் டைட்டிலுக்கு ஏற்றார் போல கல்லூரி மாணவனாக இருக்கும் கதிர் எதிர்கொள்ளும் சம்பவங்கள் தான் படத்தின் முக்கிய கதையாக இருக்கும் போலத் தெரிகிறது. இக்காலத்தில் இளைஞர்களை கவர்ந்து விட்டாலே இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல ஹிட் அடிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இப்படத்தை எஸ்.எல்.எஸ்.ஹென்றி என்பவர் எழுதி இயக்கியுள்ளார். பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஃபார்ச்சூன் ஸ்டுடியோஸ், எமினன்ட் என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனங்கள் படத்தை தயாரித்துள்ளன. 2024ல் இப்படம் வெளியாகும் என இந்த போஸ்டரிலேயே அறிவித்துள்ளனர்.
- Advertisement -