Homeசெய்திகள்சினிமாகவின், நயன்தாரா கூட்டணியில் இணைந்த மற்றுமொரு பிரபலம்..... ஷூட்டிங் எப்போது?

கவின், நயன்தாரா கூட்டணியில் இணைந்த மற்றுமொரு பிரபலம்….. ஷூட்டிங் எப்போது?

-

- Advertisement -

கவின், நயன்தாரா கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.கவின், நயன்தாரா கூட்டணியில் இணைந்த மற்றுமொரு பிரபலம்..... ஷூட்டிங் எப்போது?நடிகர் கவின் லிப்ட், டாடா உள்ளிட்ட படங்களுக்கு பிறகு பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் ஸ்டார் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதே சமயம் நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும், வெற்றிமாறனின் தயாரிப்பில் மாஸ்க் படத்திலும், நெல்சன் தயாரிப்பில் ப்ளடி பெக்கர் படத்திலும் நடித்து வருகிறார் கவின். அடுத்ததாக கவின், தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். இந்த படத்தை பாடலாசிரியர் விஷ்ணு எடாவன் இயக்க உள்ளார். இது குறித்த தகவல்கள் ஏற்கனவே வெளியான நிலையில் இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் கீழ் லலித் குமார் இந்த படத்தை தயாரிக்கப் போவதாகவும் சொல்லப்பட்டது. கவின், நயன்தாரா கூட்டணியில் இணைந்த மற்றுமொரு பிரபலம்..... ஷூட்டிங் எப்போது?மேலும் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். அடுத்ததாக இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜூலை 22 ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ