Homeசெய்திகள்சினிமாகவின், நயன்தாரா படத்தில் இவர்களும் நடிக்கிறாங்களா? .... ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ் வைரல்!

கவின், நயன்தாரா படத்தில் இவர்களும் நடிக்கிறாங்களா? …. ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ் வைரல்!

-

- Advertisement -

கவின், நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.கவின், நயன்தாரா படத்தில் இவர்களும் நடிக்கிறாங்களா? .... ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ் வைரல்!நடிகர் கவின் ஆரம்பத்தில் சின்ன திரையில் பணியாற்றி அதன் பின் வெள்ளி திரைக்குள் நுழைந்து ஹீரோவாக உருவெடுத்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று கவினுக்கு திருப்புமுனையாக அமைந்தது. கவின், நயன்தாரா படத்தில் இவர்களும் நடிக்கிறாங்களா? .... ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ் வைரல்!அதை தொடர்ந்து கவின் பல படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது விஷ்ணு எடாவன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. கவின், நயன்தாரா படத்தில் இவர்களும் நடிக்கிறாங்களா? .... ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ் வைரல்!ஜென் மார்ட்டின் இந்த படத்திற்கு இசையமைக்க லியோன் பிரிட்டோ படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தள புகைப்படங்களும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதே சமயம் இந்த படத்தில் நடிகை நயன்தாரா, கவின் ஆகியோருடன் இணைந்து ராதிகா சரத்குமார், பிரபு, பாக்கியராஜ், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ