நடிகை நயன்தாரா தற்போது மண்ணாங்கட்டி, டாக்ஸிக் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதே சமயம் இவர் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கப் போகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க நடிகர்கள் லிப்ட், டாடா உள்ளிட்ட படங்களுக்கு பிறகு பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கவின் நடிப்பில் கடைசியாக ஸ்டார் திரைப்படம் வெளியான நிலையில் மாஸ்க், பிளடி பெக்கர் போன்ற படங்களும் கைவசம் வைத்துள்ளார் கவின்.
இந்நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நயன்தாரா, கவின் கூட்டணியில் புதிய படம் உருவாகப் போவதாகவும் அந்த படத்தை விஷ்ணு எடாவன் இயக்கப் போவதாகவும் செய்திகள் வெளியானது. மேலும் இந்த படம் காதல் படமாக உருவாகிறது என்றும் இதனை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் படத்தில் கவின், நயன்தாராவுடன் இணைந்து சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இதன் படப்பிடிப்பு வருகின்ற ஜூலை 22 ஆம் தேதி தொடங்குகிறது என ஏற்கனவே தகவல் கசிந்தது. தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் நாளை (ஜூலை-12) இந்த படத்தின் பூஜை நடைபெற உள்ளது என புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.