கவின் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு தொடர்பாக தகவல் வெளியாகி உள்ளது.
சின்னத்திரையில் மெகா தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பின்னர் வெள்ளித்திரைக்கு வந்து ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் கவின். அண்மையில் கவின் நடிப்பில் வௌியான டாடா திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதில் கவினின் நடிப்பு பாராட்டப்பட்டது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் கவின் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தின் பணிகள் பூஜையுடன் கடந்த மே மாதம் தொடங்கியது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை பிரபல நடன இயக்குநர் சதீஷ் இயக்குகிறார். அயோத்தி படம் மூலம் கவனம் ஈர்த்த நடிகை ப்ரீத்தி அஸ்ரானி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் மிஷ்கின் நடிக்க உள்ளார்.
இத்திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் இப்படத்தை தயாரிக்கிறார். ரோம் காம் கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது. கவின் படத்துக்கு அனிருத் இசை அமைப்பது இதுவே முதல்முறையாகும். ஒளிப்பதிவாளராக ஹரீஷ் மற்றும் எடிட்டராக ஆர்.சி.பிரனவ் பணியாற்ற உள்ளனர். இந்நிலையில், இத்திரைப்படத்திற்கு கிஸ் என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, பியார் பிரேமா காதல் பட இயக்குநர் எலன் இயக்கத்தில் கவின் நடித்து வருகிறார். ஸ்டார் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் காதலர் தினத்திற்கு ஸ்டார் திரைப்படம் வெளியாகிறது.