கவின் நடிக்கும் பிளடி பெக்கர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் கவின் ஆரம்பத்தில் சிவகார்த்திகேயனை போல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதே சமயம் இவர் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் கதாநாயகனாக நடித்து அப்பொழுதே ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்தவர். அடுத்ததாக இவர் வெள்ளித்திரையில் நுழைந்து நட்புன்னா என்னன்னு தெரியுமா, லிஃப்ட், டாடா போன்ற படங்களில் நடித்து பெயர் பெற்றுள்ளார். அதிலும் இவர் நடித்திருந்த டாடா திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. கடைசியாக இவரது நடிப்பில் ஸ்டார் எனும் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக மாஸ்க் போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகர் கவின், நயன்தாராவுடன் இணைந்து புதிய படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் ஜெயிலர் படத்தின் இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் பிளடி பெக்கர் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார் கவின். இந்த படத்தினை நெல்சன் இடம் உதவியாளராக பணிபுரிந்த சிவபாலன் இயக்க ஜென் மார்ட்டின் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் நடிகர் கவின் பிச்சைக்காரனாக நடித்துள்ளார்.
#NaanYaar 🤍😊 first single glimpse from #BloodyBeggar
Promotional Music Video Releasing
on 13th Sep, Friday at 6 PM🎶#BloodyBeggarFromDiwali 💥 @FilamentPicture @Kavin_m_0431 @afilmbysb @sujithsarang @JenMartinmusic @Nirmalcuts @ManimozhianRam2 @sv_sandhosh @jShakthiPradeep… pic.twitter.com/w5RTeBXudo— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) September 11, 2024
ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதைத் தொடர்ந்து இப்ப படமானது 2024 தீபாவளி தினத்தன்று வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வருகின்ற செப்டம்பர் 13ஆம் தேதி மாலை 6 மணி அளவில் பிளடி பெக்கர் படத்திலிருந்து நான் யார் எனும் முதல் பாடல் வெளியாக இருப்பதாக பட குழுவினர் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.