Homeசெய்திகள்சினிமாகவின் நடிக்கும் ஸ்டார்... மேக்கிங் வீடியோ வெளியீடு...

கவின் நடிக்கும் ஸ்டார்… மேக்கிங் வீடியோ வெளியீடு…

-

- Advertisement -
கவின் நடிப்பில் உருவாகி உள்ள ஸ்டார் திரைப்படத்தின் மேக்கிங் காணொலியை படக்குழு பகிர்ந்துள்ளது.

சின்னத்திரை நடிகரான கவின், லிப்ட் படத்தின் மூலம் நாயகனாக வெள்ளித்திரைக்கு அறிமுகம் ஆகினார். இதைத் தொடர்ந்து கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. படப்பிடிப்பு முடிந்தும் பெரும் சிக்கல்களை தாண்டி வெளியான டாடா திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

நடன இயக்குநர் சதீஷ், இயக்குராக அறிமுகமாகும் படத்தில் கவின் நாயகனாக நடிக்கிறார். அதேபோல, பியார் பிரேமா காதல் பட இயக்குநர் இலடனுடன் கவின் புதிய படம் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஸ்டார் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர்ராஜா இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்நிலையில், படத்திலிருந்து ஏற்கனவே ஒரு பாடல் மற்றும் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்திலிருந்து மேக்கிங் காணொலியை படக்குழு சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது. இது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், படப்பிடிப்பு நிறைவு பெற்றதையும் அறிவித்துள்ளது.

MUST READ