Homeசெய்திகள்சினிமாநடிகராக நடிக்கும் கவின்.... ஸ்டார் படத்தின் முக்கிய அறிவிப்பு!

நடிகராக நடிக்கும் கவின்…. ஸ்டார் படத்தின் முக்கிய அறிவிப்பு!

-

நடிகராக நடிக்கும் கவின்.... ஸ்டார் படத்தின் முக்கிய அறிவிப்பு!நடிகர் கவின் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்றவர்களில் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கிறார். அந்த வகையில் இவர் நடித்திருந்த டாடா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. கவினுக்கு திருப்புமுனையாக அமைந்த இந்த டாடா படத்திற்கு பிறகு பல பட வாய்ப்புகள் தேடி வருகின்றன. அந்த வகையில் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் கவின். அதேசமயம் பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குனர் இளன் இயக்கத்தில் ஸ்டார் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்ட இதன் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்தில் கவினுடன் இணைந்து ஆதிதி பொஹங்கர், லால், கீதா கைலாசம், பிரீத்தி மற்றும் பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கிறார். ரைஸ் ஈஸ்ட் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இரண்டு தினங்களுக்கு முன்பாக ஸ்டார் படத்தின் போட்டோ ஆல்பம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. நடிகராக நடிக்கும் கவின்.... ஸ்டார் படத்தின் முக்கிய அறிவிப்பு!அதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் பிறந்த தினமான இன்று ஸ்டார் படத்தின் காலேஜ் சூப்பர் ஸ்டார் என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் வீடியோ இன்று நண்பகல் 12.12 மணி அளவில் வெளியாகும் என்று போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். மேலும் இந்த போஸ்டரின் மூலம் கவின் இந்த படத்தில் நடிகராக நடித்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. எனவே இந்தப் பாடலை எதிர்பார்த்து பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ