கவின் நடிக்கும் கிஸ் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கவின் ஆரம்பத்தில் சின்னத்திரையில் பணியாற்றி ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருந்தார். அதன் பின்னர் வெள்ளித் திரையிலும் என்ட்ரி கொடுத்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக இவரது நடிப்பில் ப்ளடி பெக்கர் எனும் திரைப்படம் வெளியானது. அதே சமயம் இவர் மாஸ்க், ஹாய் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் இவர் நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கிஸ் எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் கவினுடன் இணைந்து ப்ரீத்தி அஸ்ரானிமுக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. ஜென் மார்ட்டின் இப்படத்திற்கு இசையமைக்க ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தினை 2025 மார்ச் 28ஆம் தேதி திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது. ஆனால் மார்ச் 28 இல் விக்ரமின் வீர தீர சூரன் திரைப்படம் வெளியாக இருப்பதால் மார்ச் 21ஆம் தேதியே கிஸ் திரைப்படம் திரைக்கு வரும் என சொல்லப்படுகிறது. இருப்பினும் இனிவரும் நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.