Homeசெய்திகள்சினிமாகவினுக்கு வில்லியாகும் ஆண்ட்ரியா...... பூஜையுடன் தொடங்கிய புதிய படம்!

கவினுக்கு வில்லியாகும் ஆண்ட்ரியா…… பூஜையுடன் தொடங்கிய புதிய படம்!

-

- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் கவின்.கவினுக்கு வில்லியாகும் ஆண்ட்ரியா...... பூஜையுடன் தொடங்கிய புதிய படம்! தனது கடின உழைப்பினால் ஹீரோவாக உருவெடுத்தார் கவின். அதன்படி இவர் நடிப்பில் வெளியான லிப்ட், டாடா போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக டாடா திரைப்படம் கவினுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்து பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்று தந்தது. டாடா படத்தில் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கவினுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.கவினுக்கு வில்லியாகும் ஆண்ட்ரியா...... பூஜையுடன் தொடங்கிய புதிய படம்! அதன்படி சமீபத்தில் ஸ்டார் திரைப்படம் வெளியாகி ஏகோபித்த வரவேற்பை பெற்று வரும் நிலையில் மீண்டும் தான் ஒரு ஸ்டார் என்பதை நிரூபித்து விட்டார் கவின். இந்த படத்தில் கவினுடைய நடிப்பு பெரிதளவும் பேசப்படுகிறது. இந்நிலையில் அடுத்ததாக கவின் நடிக்கும் புதிய படம் தொடங்கியுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் விக்ரன் அசோகன் இயக்குகிறார். இயக்குனர் வெற்றிமாறன் இந்த படத்தை தயாரிக்கிறார். மேலும் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். அதே சமயம் ஏற்கனவே வெளியான தகவலின் படி இந்த படத்தில் கவினுக்கு வில்லியாக நடிகை ஆண்ட்ரியா நடிக்கிறார். கவினுக்கு வில்லியாகும் ஆண்ட்ரியா...... பூஜையுடன் தொடங்கிய புதிய படம்!இந்த படத்திற்கு மாஸ்க் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படமானது நேற்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ