கவின் நடிக்கும் மாஸ்க் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நடிகர் கவின் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் ஆவார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான லிஃப்ட், டாடா ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை கவினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. அதன்படி கவினும் தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். ஏற்கனவே கிஸ், ஹாய் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள கவின், மாஸ்க் எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தயாரிக்கிறார். இதனை அறிமுக இயக்குனர் விக்ரணன் அசோக் இயக்குகிறார். இதில் கவின், ஆண்ட்ரியா, ருஹானி ஷர்மா மற்றும் பலர் நடிக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்தது. மேலும் இந்த படத்தை 2025 மே மாதத்தில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (பிப்ரவரி 26) காலை 10:30 மணி அளவில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.