கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கவின் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடிப்பதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இதன் பின்னர் பீட்சா, இன்று நேற்று நாளை ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். அடுத்தது நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி லிஃப்ட், டாடா ஆகிய வெற்றி படங்களை கொடுத்தார். இதற்குப் பிறகு கவினுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வர தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்தாண்டு இவரது நடிப்பில் ப்ளடி பெக்கர் எனும் திரைப்படம் வெளியானது. இதன் பின்னர் நயன்தாராவுடன் இணைந்து புதிய படம் ஒன்று நடித்து வருகிறார் கவின். இதற்கிடையில் இவர், நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவருடன் இணைந்து பிரீத்தி அஸ்ரானி, பிரபு, மிஸ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜென் மார்ட்டின் இதற்கு இசை அமைத்துள்ளார்.
Ungaluku ichu ichu endraa ketkiradhu?
Maalai 5.04 manikku sandhippom ♥️#RomeoPictures4TitleReveal & #Kavin’s next@kavin_m_0431 @mynameisraahul @dancersatz @dop_harish @jenmartinmusic @peterheinoffl #MohanaMahendiran @preethiasrani_ @editorrcpranav @iamgunashekar… pic.twitter.com/uJ7VR97cVs
— raahul (@mynameisraahul) February 10, 2025
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்து அறிவிப்பு இன்று (பிப்ரவரி 10) மாலை 5.04 மணியளவில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த படத்திற்கு ‘கிஸ்‘ என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.