Homeசெய்திகள்சினிமாஸ்டாராக மின்னினாரா கவின்?...... திரை விமர்சனம் இதோ!

ஸ்டாராக மின்னினாரா கவின்?…… திரை விமர்சனம் இதோ!

-

கவின் நடிப்பில் இளன் இயக்கத்தில் உருவாகி இருந்த திரைப்படம் தான் ஸ்டார். இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று உலகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. தற்போது இதன் திரை விமர்சனத்தை காணலாம். ஸ்டாராக மின்னினாரா கவின்?...... திரை விமர்சனம் இதோ!

இந்த படத்தில் கலையரசன் என்ற கதாபாத்திரத்தில் கவின் நடித்த அவருக்கு அப்பாவாக நடிகர் லால் நடித்துள்ளார். வாழ்க்கையில் நடிகனாக வேண்டும் என்ற கனவை நனவாக்க முடியாமல் தவிக்கும் ஒரு தந்தை தன் மகனை சிறுவயதிலிருந்தே நடிகராக வேண்டும் என்ற நோக்கத்தில் வளர்க்கிறார். அந்த மகன் கனவுகளுடன் பல சிக்கல்களை தாண்டி ஹீரோவாக மாறுகிறாரா இல்லையா என்பதுதான் ஸ்டார் படத்தின் கதை.ஸ்டாராக மின்னினாரா கவின்?...... திரை விமர்சனம் இதோ!

நடிகர் கவினுக்கு டாடா திரைப்படம் எப்படி பெரிய அளவில் பெயரையும் புகழையும் பெற்று தந்ததோ அதைப்போலவே இந்த ஸ்டார் திரைப்படமும் கவிலுக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. அந்த அளவிற்கு கவின் இந்த படத்தில் ஒவ்வொரு காட்சிகளிலும் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி திரையில் மின்னுகிறார்.ஸ்டாராக மின்னினாரா கவின்?...... திரை விமர்சனம் இதோ! நடிகர் லால் அப்பாவாக வழக்கம்போல் தனது நடிப்பில் அசத்தி விடுகிறார். கீதா கைலாசம், ஆதிதி பொஹங்கர் ஆகியோர் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக தந்துள்ளனர். இந்த படம் ட்ரைலரில் பார்த்ததே போல் எதிர்பார்த்த அளவில் விருந்து படைக்கவில்லை என்றாலும் எந்தவித சலிப்பையும் ஏற்படுத்தாமல் கதை நகர்கிறது. ஸ்டாராக மின்னினாரா கவின்?...... திரை விமர்சனம் இதோ!யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திற்கு பெரிய அளவில் பலம் கொடுத்து அரங்கத்தையே ஆர்ப்பரிக்க செய்கிறது. எழிலரசின் ஒளிப்பதிவு பாராட்டுகளை பெறுகிறது. மேலும் படத்தில் வரும் கேமியோரோலுக்கு தியேட்டரில் விசில் சத்தம் விண்ணை பிளக்கிறது. கனவுகளுடன் தனது இலக்கை நோக்கி ஓடும் இளைஞர்களுக்கு இந்தப் படம் உந்துதலாக இருக்கும் விதத்தில் அமைந்துள்ளது. ஆனால் ஒரு சில இடங்களில் அவர்கள் படும் கஷ்டத்தை திரையில் நேர்த்தியாக தர தவறிவிட்டது இந்த ஸ்டார் திரைப்படம். இருப்பினும் கிளைமாக்ஸ் காட்சிகளில் கவினின் நடிப்பு படத்தையே தாங்கிப் பிடித்திருக்கிறது. ஆகவே சூப்பரான ஐடியா உடன் களமிறங்கிய இயக்குனர் இளன் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருந்தால் படம் அருமையாக இருந்திருக்கும்.

MUST READ