Homeசெய்திகள்சினிமாஅடுத்த வாரம் நடைபெறும் கவினின் 8வது பட பூஜை!

அடுத்த வாரம் நடைபெறும் கவினின் 8வது பட பூஜை!

-

நடிகர் கவின் ஆரம்பத்தில் சின்ன திரையில் பணியாற்றி பின்னர் வெள்ளித்திரைக்குள் நுழைந்து ஹீரோவாக உருவெடுத்தார். அடுத்த வாரம் நடைபெறும் கவினின் 8வது பட பூஜை!அதன்படி நட்புன்னா என்னன்னு தெரியுமா, லிஃப்ட், டாடா போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அதில் குறிப்பாக கணேஷ் கே பாபு இயக்கத்தில் வெளியான டாடா திரைப்படம் கவினுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதை தொடர்ந்து கவினுக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் கிஸ், மாஸ்க், பிளடி பெக்கர் என பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அடுத்ததாக விஷ்ணு எடாவன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க இருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். கவினின் 8வது படமான இப்படம் காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாக இருக்கிறது. அதாவது இது நடிகர் கவின் தன்னைவிட மூத்த வயது பெண்ணான நயன்தாராவை காதலிக்கும் கதையாகும். அடுத்த வாரம் நடைபெறும் கவினின் 8வது பட பூஜை!இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் லலித் குமார் தயாரிக்க இருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் பூஜை கடந்த ஜூலை 12ஆம் தேதி நடைபெறும் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் பூஜை அடுத்த வாரம் நடைபெறும் என்று புதிய தகவல் வெளிவந்துள்ளது. இருப்பினும் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ