Homeசெய்திகள்சினிமாகயல் ஆனந்தியின் 'ஒயிட் ரோஸ்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

கயல் ஆனந்தியின் ‘ஒயிட் ரோஸ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

-

- Advertisement -

கயல் ஆனந்தி, பொறியாளன், கயல் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். அதைத் தொடர்ந்து த்ரிஷா இல்லனா நயன்தாரா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதேசமயம் கயல் ஆனந்தி, சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கயல் ஆனந்தியின் நடிப்பில் உருவான மங்கை படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

கயல் ஆனந்தியின் 'ஒயிட் ரோஸ்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!இதற்கிடையில் கயல் ஆனந்தி, ஒயிட் ரோஸ் எனும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராஜசேகர் இயக்குகிறார். இந்த படத்தில் கயல் ஆனந்தியுடன் இணைந்து ஆர் கே சுரேஷ், சசிலயா, கணேஷ், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். பூம்பாறை முருகன் புரொடக்ஷன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு V. இளையராஜா ஒளிப்பதிவு செய்ய சுதர்சன் எம் குமார் இசையமைக்கிறார். இந்த படம் சைக்காலஜிக்கல் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருகிறது. அதேசமயம் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இப்படம் தயாராகி வருகிறது. படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ