‘பத்து தல’ படத்திற்கு பிறகு சிம்பு தற்போது தனது அடுத்த படமான ‘STR 48′ படத்தில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
கமல்ஹாசனின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தில் கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது . அனிருத் இசையில் இப்படம் உருவாக இருக்கிறது.
சில நாட்களுக்கு முன் இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகாத நிலையில் இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
கீர்த்தி சுரேஷ் தமிழில் தற்போது உதயநிதி நடிக்கும் ‘மாமன்னன்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் ‘சைரன் ‘ படத்திலும் ‘ரிவால்வர் ரீட்டா’ படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த இரு படங்களின் படப்பிடிப்பு முடிந்த பின்பு STR48 இல் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் சிம்பு தனது உடல் எடையை குறைத்து இப்படத்திற்காக தயாராகி வருகிறார். தற்போது இவர் தற்காப்பு கலை கற்பதற்காக லண்டன் சென்றுள்ள நிலையில், அதனை முடித்து வந்த பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. அதன்படி ஆரம்பகட்ட பணிகளான நடிகர் நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
பான் இந்திய அளவில் உருவாக இருக்கும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளிவர இருக்கிறது. இப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் ஒரு வரலாற்று படமாக இருக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இப்படம் குறித்த புதிய தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.