Homeசெய்திகள்சினிமாநாகசைதன்யாவுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!

நாகசைதன்யாவுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!

-

நாகசைதன்யா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் புதிய படம் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
நாகசைதன்யா கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி படத்தில் நடித்தார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிய இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில் நாகசைதன்யா நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. கார்த்திகேயா 2 படத்தை இயக்கிய சந்து மொண்டேடி இயக்கத்தில் அவர் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.
இயக்குனர் சந்து மொண்டேட்டி நடிகர் நாகார்ஜுனாவின் தீவிர ரசிகர். அதன் காரணமாகவே நாக சைதன்யாவுடன் இரண்டு படங்கள் ஏற்கனவே இயக்கியுள்ளார். தற்போது இருவரும் மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளனர்.
இந்தப் படத்தை ஜிஏ 2 பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் நாக சைதன்யா மீனவர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் இந்தப் படம் கிராமப்புற பின்னணியில் உருவாகும் என்றும் தயாரிப்பாளர் பன்னி வாஸ் ஏற்கனவே கூறியிருந்தார். இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்களுக்கு இடம் இருப்பதாக கூறப்படுகிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய நாயகியாக நடிக்கவுள்ளதாகவும், அனுபமா பரமேஸ்வரன் மற்றொரு நாயகியாக நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுவரை நாக சைதன்யாவும் கீர்த்தி சுரேஷும் இணைந்து நடிக்கவில்லை.

கீர்த்தி சுரேஷின் மகாநதி படத்தில் அக்கினேனி நாகேஸ்வர ராவ் வேடத்தில் சைதன்யா நடித்திருந்தார். எனவே, இந்த புதிய படம் அவர்கள் இணையும் முதல் படமாகும். அனுபமா ஏற்கனவே நாக சைதன்யா மற்றும் சந்து மொண்டேடியுடன் ‘பிரேமம்’ படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

MUST READ