Homeசெய்திகள்சினிமாஅந்த விஷயத்தை தான் இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம்.... 'ரகு தாத்தா' குறித்து கீர்த்தி சுரேஷ்!

அந்த விஷயத்தை தான் இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம்…. ‘ரகு தாத்தா’ குறித்து கீர்த்தி சுரேஷ்!

-

ரகு தாத்தா படம் குறித்து பேசிய கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி வரும் நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த விஷயத்தை தான் இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம்.... 'ரகு தாத்தா' குறித்து கீர்த்தி சுரேஷ்!அந்த வகையில் இவரது நடிப்பில் ரகு தாத்தா எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து தேவதர்ஷினி, எம்.எஸ். பாஸ்கர், ரவீந்திர விஜய், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தை சுமன் குமார் இயக்கியிருக்கிறார். ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இந்த படமானது வருகின்ற ஆகஸ்ட் 15 திரைக்கு வர இருக்கிறது. படப்பிடிப்புகளும் ஏற்கனவே நிறைவடைந்து தற்போது ப்ரமோஷன் பணிகள் மிக்க தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த சமயத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் செய்தியாளர்களை சந்தித்து ரகு தாத்தா படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, “ரகு தாத்தா படம் அனைவரையும் சிந்திக்க வைக்க கூடியதாக இருக்கும். இந்த படத்தில் இந்தி திணைப்பு பற்றி ஆங்காங்கே சொல்லியிருக்கிறோம். அதையும் காமெடியாக சொல்லி இருக்கிறோம். பெண்கள் மீது திணிக்கப்படக்கூடிய பல விஷயங்களையும் சொல்லி இருக்கிறோம். கலாச்சாரம் என்ற பெயரில் சில விஷயங்கள் திணிக்கப்படுவதை பற்றி பேசி இருக்கிறோம். அந்த விஷயத்தை தான் இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம்.... 'ரகு தாத்தா' குறித்து கீர்த்தி சுரேஷ்!இந்த படம் முழுவதும் காமெடி படம் தான். அனைவரும் ஜாலியாக பாப்கார்ன் சாப்பிட்டு கொண்டே படத்தை பார்த்து ரசிக்கலாம். இதுவரை இப்படி ஒரு படத்தை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். படம் பார்த்தீர்கள் என்றால் அனைத்தும் உங்களுக்கு புரியும். மொழியை அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டில் மட்டும்தான் இது போன்ற படத்தை பற்றி பேச முடியும். மற்ற படங்களை விட இந்த படம் வித்தியாசமாக இருக்கும்” என்று சில தகவல்களை பகிர்ந்து உள்ளார் கீர்த்தி சுரேஷ்.

MUST READ